சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கம்பைநல்லூர் சந்தைப்பேட்டை பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்த காடையாம்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பிரேம்குமாரிடம் இருந்த வெளிமாநில லாட்டரி சீட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.