சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் காவல்துறையினர் ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த அருள் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோன்று மோட்டூரில் மது விற்ற தில்லைக்கரசி மற்றும் கம்பைநல்லூர் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட நவலையில் மது விற்பனை செய்த மாதேஸ்வரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 77 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.