சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர் .
நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது திருக்கடையூர் அருகே உள்ள மருதம்பள்ளம் பிரதான சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த நபரை கண்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர் .
அவரிடம் விசாரணை நடத்தியதில் குமாரகுடி தெற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் என்பதும் இவர் மருதம்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.