Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. கையும் களவுமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையில் காவல்துறையினர் வெள்ளாண்டி வலசு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மூட்டைகளுடன் மொபட்டில் வந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பதும் இவர் ரேஷன் அரிசி கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பரமசிவமை கைது செய்தனர்.

மேலும் பரமசிவம் கூறிய இடத்திலிருந்து அரிசி, மொபட் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோன்று அன்னதானப்பட்டி நெத்திமேடு பகுதியிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி தெற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து வேனில் இருந்த ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை அதிகாரிகள் பிடித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் காவல்துறையினர் செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது செல்வராஜ் மக்களிடம் குறைவான விலைக்கு அரிசியை விலைபேசி வாங்கி அதை ராசிபுரம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வரும் வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் வேனுடன், அதிலிருந்த ரேஷன் அரிசியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |