Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” மாட்டி கொண்ட 13 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கீழவீதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியாவுக்கு புகார் வந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியா தனிப்படை காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி சிறப்பு தனிப்படை காவல்துறையினர் தனியார் தங்கும் விடுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 13 பேர் கொண்ட கும்பல் சூதாடுவது தனிப்படை காவல் துறையினருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட சீட்டுகளை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக சூதாடிய  பூமிநாதன், ராஜ்குமார், சுப்பிரமணி, விக்னேஷ், மகேந்திரன், பிரகாஷ், எட்வின்,  செய்யது, செல்வகுமார், பிரகாஷ், ரபீக், தர்மராஜ், சிராஜூதீன் ஆகிய 13 பேரையும் தனிப்படை காவல்துறையினர் பிடித்து தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 13 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 18 ஆயிரம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |