நாகை மாவட்டம் சீர்காழி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தார் .
நாகை மாவட்டம் சீர்காழி அருகே நிம்வேலி ஊராட்சிக்கு உட்பட்ட தத்தங்குடி கிராமத்தில் பழைய ஓ.என்.ஜி.சி திடல் அருகே அனுமதியின்றி அதே கிராமத்தை சேர்ந்த சக்தி வீரன் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரில் மணல் ஏற்றி சென்றுள்ளார் .இதைக்கண்ட அப்பகுதி மக்கள் டிராக்டரை தடுத்து நிறுத்தினர் .இதுகுறித்து சீர்காழி தாசில்தாரான சண்முகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் சண்முகம் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தார் .இதையடுத்து சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .இதுகுறித்து சீர்காழி இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ,சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் .மேலும் தலைமறைவான சக்தி வீரன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.