சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 44 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு, அரூர், பென்னாகரம் போன்ற பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 44 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 1,000 மதுபாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.