சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள செட்ரப்பட்டி, அப்பியம்பட்டி, பனந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மொரப்பூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செட்ரப்பட்டியில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக குமரவேல், அன்பு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் கடையில் மது குடிக்க அனுமதித்ததாக ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோன்று கம்பைநல்லூர் பேருந்து நிலையம் அருகே கடையில் மதுகுடிக்க அனுமதித்த கலைச்செல்வி, தனபால் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.