மினி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டகோவில் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 27 வயதுடைய சத்தியசீலன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சத்தியசீலன் சுண்டக்குடி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சத்தியசீலன் செல்லியம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வேகமாக சென்ற மினி பேருந்து எதிர்பாராத விதமாக இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த சத்தியசீலனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் சத்தியசீலன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று சத்தியசீலனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய மினி பேருந்தின் டிரைவரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.