Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய டிராக்டர்… கொடூரமாக கொல்லப்பட்ட காவலாளி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன் விரோதம் காரணமாக காவலாளியை ஒருவர் டிராக்டரால் மோதியும், அரிவாளால் வெட்டியும்  கொலை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகேசன் என்பவருக்கும் கணேசனுக்கும் இடையே நிலப் பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணேசன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் பாலமுருகேசன்  டிராக்டரில் வேகமாக வந்து கணேசனின் மொபட் மீது மோதியதால் கணேசன்கீழே விழுந்து விட்டார்.

இதனையடுத்து பால முருகேசன் டிராக்டரிலிருந்து வேகமாக கீழே இறங்கி கணேசனை தூக்கி விடாமல் ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய பால முருகேசனை வலைவீசி தேடி வந்தனர். அப்போது அவர் வெளியூருக்கு தப்பி செல்கிறார் என்று தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று  தப்பி ஓட முயன்ற பாலமுருகேசனை பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் பாலமுருகேசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |