Categories
உலக செய்திகள்

பான்காங் ஏரிக்கு அருகில்…. 2-ஆம் பாலம் அமைக்கும் சீனா…. வெளியான செயற்கைகோள் புகைப்படம்…!!!

லடாக்கின் கிழக்கு பகுதியில் இருக்கும் ஏரிக்கு அருகில் சீனா இரண்டாம் பாலத்தை கட்டி கொண்டிருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரியவந்திருக்கிறது.

லடாக்கின் கிழக்குப்பகுதியில் அசல் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா மற்றும் சீன நாட்டு படைகளைக்கிடையே மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் 15ஆம் தேதியன்று சீனாவின் படைமிகப்பெரிய ஆயுதங்களுடன் கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அதில் சீன தரப்பிலும் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அதே வருடம் ஆகஸ்ட் மாதம் பான்காங் ஏரியின்
தென் பகுதியை இந்திய படையினர் கைப்பற்றினார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் சீனா தங்கள் கட்டுப்பாட்டை பலப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் லடாக்கின் பாங்காங் ஏரிப்பகுதியில் ஒரு பாலத்தை சீனா கட்டியிருக்கிறது.

இதனை இந்தியா கடுமையாக எதிர்த்தது. இந்நிலையில் அந்த பகுதியில் மீண்டும் புதிதாக ஒரு பாலத்தை சீன ராணுவம் கட்டிக்கொண்டிருக்கும் புகைப்படம் செயற்கைக்கோள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அந்த பாலம் அமைக்கப்படுகிறது. சீனப்படை விரைவில் முன்னேறுவதற்காக இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

Categories

Tech |