உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் ரஷ்யா அதிகமான போர் விமானங்களை குவித்திருப்பதை விளக்கக்கூடிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதிக்கு அருகில் ரஷ்யா தங்களின் படைகளை குவித்துக் கொண்டிருக்கிறது. இதுகுறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் நாட்டின் அருகே இருக்கும் கிரைமியா, பெலாரஸ் மற்றும் மேற்கு ரஷ்ய பகுதிகளில் படைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் போர் ஏற்படக் கூடிய அபாயம் அதிகரித்திருக்கிறது. ரஷ்யா தங்களின் ராணுவ படைகளை உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. எனினும், அதிகப்படியான படைகளை உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் குவித்துக் கொண்டிருக்கிறது என்பது தற்போது ஆதாரத்துடன் நிரூபணமாகிவிட்டது.