பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருத்துவக்கல்லூரி சாலை இந்திரா நகரில் ரெனால்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம்மேரி என்ற மனைவி இருக்கிறார். இவர் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் முனிசிபல் காலனியை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான கிளமன்ட்டேவிட், ஜேம்ஸ் கேம்ரோன் ஆகியோர் மரகதம்மேரிக்கு சுகர் டெஸ்ட் எடுக்க அடிக்கடி அவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் மீது மரகதம்மேரிக்கு நம்பிக்கை வந்ததால் அனைத்து வேலைகளையும் அவர்களிடமே சொல்லி பார்த்துள்ளார்.
இந்த நிலையில் மரகதம்மேரியின் தங்கச்சங்கிலியை அண்ணன்-தம்பி இருவரும் பறிக்க முயற்சி செய்தனர். அப்போது மரகதம்மேரி சத்தமிட்டதால் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து மரகதம்மேரி கொடுத்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் வழக்குப்பதிவு செய்து கிளாமன்ட்டேவிட், ஜேம்ஸ் கேம்ரோன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.