Categories
உலக செய்திகள்

ஒரே ராக்கெட் தான்… ஆனால் 143 செயற்கைகோள் இருக்கு…. சாதனை படைத்த Space X நிறுவனம்…!! 

Space X  என்ற நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 143 சிறிய செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.

நார்த்ரோப் க்ரம்மன் என்ற நிறுவனம்  2018ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 108 செயற்கைக்கோள்களை விண்னில் செலுத்தி சாதனைப் படைத்தது. ஆனால் தற்போது Space X  நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்களை  விண்ணிற்கு அனுப்பி அந்த சாதனையை முறியடித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பலவகையான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு  “பால்கன்-9 ராக்கெட்” என்ற ராக்கெட் புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் என்ற விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.  இந்த ஒரே ராக்கெட்டில் 143 சிறிய வகை செயற்கை கோள்களும் அனுப்பப்பட்டது. ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள் பூமியின் வட்டப்பாதையில் சரியாக நிலை நிறுத்தப்பட்டது.

அரசு தொடர்பாகவும் வணிகரீதியாகவும் செலுத்தப்பட்ட  ராக்கெட்டில் உள்ள 143 செயற்கைக்கோள்களில் 17 சிறிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள், 48 எர்த்-இமேஜிங் செயற்கைக்கோள்கள் மற்றும்  மற்றும் 30 சிறிய செயற்கை கோள்கள் இடம்பெற்றுள்ளன. விண்வெளியில் சிறிய நிறுவனங்களில் செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய “ரைட்ஷேர் ராக்கெட்” திட்டத்தை Space X நிறுவனத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த “ரைட்ஷேர் ராக்கெட்” திட்டத்தில் 200 கிலோ எடை கொண்ட  ஒரு செயற்கை கோளுக்கு ஒரு மில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக அளவிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய நிறுவனம் என்ற பெயரையும்  Space X  நிறுவனம் பெற்றுள்ளது.

Categories

Tech |