Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சு சொல்லுங்க ? பென்னிக்ஸ் நண்பர்களிடம் விசாரணை …!!

காவல்நிலையத்தில் மரணமடைந்த ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு தொடர்பாக அவரது நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் போலீஸ் விசாரணையில் இருந்தபொழுது மரணமடைந்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மரணமடைந்த ஜெயராஜ் வீடு மற்றும் கடைகளில் சோதனை செய்து பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வழக்கு குறித்த விசாரணைக்கு பென்னிக்ஸ் நண்பர்கள் ஐந்து பேர் சிபிசிஐடி போலீஸ் முன்னிலையில் ஆஜராகி உள்ளனர். 5 பேரிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் ஜூன் 19-ஆம் தேதி என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |