சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை கொலை வழக்காக மாற்றி இது தொடார்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் என 5 பேரை கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சம்பவத்தன்று வேலை பார்த்து அனைத்து காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதேபோல் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடைபெற்றது.அந்த வகையில் தற்போது மேலும் ஐந்து காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை மருத்துவ பரிசோதனை செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இதுவரை இந்த கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.