Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் வீரமரணம் அடைந்தன…22 வீரர்களின் உடலுக்கு …இறுதி அஞ்சலி செலுத்திய அமித் ஷா…!!!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் உயிரிழந்த 22 பாதுகாப்பு படை வீரர்களுக்கு ,அஞ்சலி செலுத்துவதற்காக அமித் ஷா சத்தீஸ்கர் மாநிலத்திற்கு  வந்தார் .

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ,பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில்  22 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இந்த சண்டையில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . உள்துறை அமைச்சரான அமித் ஷா தனி விமானத்தின் மூலம் ,இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வந்தார். அதன்பின் வீரமரணமடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு ,மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதன்பிறகு சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரான  பூபேஷ்  பாகலுடன் உள்துறை அமைச்சர்       அமித் ஷா அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், பயங்கர தாக்குதலை ஏற்படுத்திய மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது . இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமித் ஷா, விரைவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக போரில் நிச்சயம் வெற்றி கிட்டும் என்று  கூறினார் .அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார் .

Categories

Tech |