பிக்பாஸ் பிரபலம் முகேன் அவர்களின் பாடல் வரிகளை அடக்கியது இந்த செய்தி தொகுப்பு.
சமீபகாலமாக தமிழகத்தில் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களை காட்டிலும் அதிக ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலம் முகேன் என்றால் அது மிகையாகாது ஏன் என்று கூற வேண்டுமென்றால் முகேன் பிக்பாஸ் போட்டியில் போட்டியிட்ட மற்ற பிரபலங்களைப் போல் அல்லாமல் ஒரு தனித்துவம் மிக்கவர். குறிப்பாக அவர் தனக்குள் உள்ள பாடல் திறமைகளை வெளிக்காட்டி அதிக ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். அதிலும் சத்தியமா நான் சொல்லுறேன்டி என்ற பாடல் சமூகவலைதளத்தில் தாறுமாறாக வைரலாகி பல இளைஞர்களின் காலர் டியூன் ஆக மாறியுள்ளது. அந்த வகையில் அனைவரையும் சுண்டி இழுத்து கவர்ந்த சத்தியமா நான் சொல்லுறேன்டி என்ற பாடலின் வரிகள் இதோ,
குழி தான் உன் கன்னத்தில் விழுகுதடி.
நீ சிரிக்கையில.
வலி தான் என் நெஞ்சுக்குள்ள கதறுதடி
நீ அழுகையில.. அழகே நீ பொறந்தது அதிசயமா?
உலகம் உன் பாசத்தில் தெரியுதடி.
நிலவே என் வாழ்க்கையில் ஒளிமயமாய்
கலராய் என் வாழ்க்கையும் மாறுதடி
சத்தியமா நான் சொல்லுறேண்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
பைத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கைய வாழ்ந்தபடி
கிறுக்கி உன் கிறுக்கல் எழுத்துலதா
கிருக்கா என்ன நீயும் மாத்தி வச்ச
மனசில் இருக்குற ஆசையத்தான்
கிருக்கா உன் மேல காட்டிப்புட்டேன்
இரு மீன்கள் ஓர் ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
கையோடுதான் கை கோர்க்க……
என்ன மறந்த என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்த
நீ தான்.. நீ தான்.. நீ தாண்டி எனக்குள்ள
நான் தான்.. நான் தான்… நான் தானே உன் புள்ள ஏன் புள்ள…….