Categories
சினிமா தமிழ் சினிமா

சத்குருவை சந்திக்க சென்ற சமந்தா… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம்…!!!

சத்குருவை சந்தித்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா . இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் . மேலும் ‘தி ஃபேமிலி மேன்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார் ‌. இந்நிலையில் நடிகை சமந்தா சத்குருவை சந்திக்க சென்றுள்ளார்.

அங்கு சத்குருவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் நடிகை சமந்தா கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து பக்தி மயமாக உள்ளார் . தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே போல் சமீபத்தில் நடிகை அமலாபாலும் சத்குருவை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுடிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |