Categories
மாவட்ட செய்திகள்

கந்தசஸ்டி திருவிழாவை முன்னிட்டு…. கோவில்களில் சிறப்பு பூஜைகள்…. பக்தர்கள் விரதம்….!!

கந்தசஷ்டி திருவிழாவையொட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சாத்தான்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவானது கடந்த நவம்பர் 4 ஆம் தேதி ஆரம்பமாகியது. இதனை அடுத்து ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானை ஆகிய  தெய்வங்களுக்கு சிறப்பு கால பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து விரதத்தை தொடங்கினர். குறிப்பாக கந்த சஷ்டி திருவிழா தொடங்கிய நாளில் இருந்து அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.

முக்கியமாக சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் வழங்கினார். மேலும் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்தது. இதனை அடுத்து சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்மாள் சமேத அழகிய கூத்தர் திருக் கோவிலிலும் கந்தசஷ்டி திருவிழாவானது நடைபெற்றது. இதனால் அம்பாள், ஸ்ரீசுப்பிரமணியர், தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. குறிப்பாக ஸ்ரீசுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

Categories

Tech |