குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக ராகி கஞ்சி எவ்வாறு செய்வதென்று பாக்கலாம்.
குழந்தைகளின் முதல் சத்தான உணவு என்றாலே சத்து நிறைந்த கஞ்சி தான். முதல் உணவு நாம் கொடுக்கும் முதல் உணவை சத்தானதாக கொடுப்பது மிக அவசியம் அல்லவா.? கம்பு, திணை, ராகி, சோளம் என சிறுதானியங்களால் பல்வேறு விதமான கஞ்சிகளை செய்து கொடுக்கலாம். சத்தும் அதிகம். சுவையும் பிரமாதம். தயாரிப்பதோ மிக மிக எளிது.இதற்கும் மேலாக நம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.
ராகி கஞ்சி:
தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 3 தேக்கரண்டி
கருப்பட்டி – 3 டீஸ்பூன்
நட்ஸ் பவுடர் – 2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் சூடாகும் நேரத்திற்குள் நாம் ராகி மாவை ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் நன்றாக கரைத்து எடுத்து வைத்திருக்க வேண்டும்.சூடான தண்ணீரில் கலந்து வைத்திருக்கும் மாவை மிதமான சூட்டில் ஊற்றி அடிபிடிக்காமல் கிளறி விட வேண்டும். இவ்வாறு கிளறும் பொழுது உங்களுக்கு தேவையான அளவிற்கு கருப்பட்டி சேர்த்து கிளறுங்கள். கிளறி விட்ட பின்னர் இருக்கும்பொழுது நஸ்ட் பவுடர் சேர்த்து கொள்ளுங்கள். இறக்கிய பின்னர் மிதமான சூடாக இருக்கும்பொழுது குழந்தைகளுக்கு இதை கொடுங்கள். மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
6 மாதம் முதல் 1 வயதுள்ள குழந்தைகளுக்கு இனிப்பு சேர்க்காமலே கொடுங்கள்.