சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஊதியம் 9,000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு நூர்ஜஹான் வலியுறுத்தியுள்ளார்.
சத்துணவு ஊழியர் பொதுச்செயலாளர் நூர்ஜஹான் ஓய்வு பெறும்போது குறைந்தபட்சம் பென்ஷன் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச பென்ஷன் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விருப்ப மாறுதல் கேட்கும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் கலந்தாய்வு முறையில் விருப்ப மாறுதல் வழங்க வேண்டும். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் எங்கள் சங்கத்தின் மாநில செயற்குழுவைக் கூட்டி அடுத்தகட்ட போராட்டத்திற்கு செல்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் வலியுறுத்துகிறார்.