Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தெருவில் நின்று வாங்குகிறோம்” பள்ளி மாணவர்களின் மோசமானநிலை… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தெருவில் நின்று சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தாலுகா திம்மனமுத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக அரசு சத்துணவு பொருட்களான அரிசி, பருப்பு,மற்றும் முட்டை போன்றவை கொடுக்கப்படும். இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தற்போது பள்ளிகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் தற்போது சத்துணவு கூடங்கள் அடைக்கப்பட்டு இருப்பதால், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தெருவில் நின்று இலவச சத்துணவு பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவ-மாணவிகள் தெருவில் நின்ற வண்ணம் சத்துணவு பொருட்களை வாங்கி செல்லும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து சத்துணவு துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, சத்துணவு பொருட்கள் இருக்கக்கூடிய ரூம் அடைத்து இருப்பதாக கூறியுள்ளார். ஆனாலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்குள் வைத்துதான் அரிசி, பருப்பு மற்றும் முட்டைகளை கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |