Categories
சினிமா தமிழ் சினிமா

சத்யராஜின் ‘சூது கவ்வும் 2’… படத்தில் நடிக்கவுள்ள மாஸ் நடிகர்… வெளியான சூப்பர் தகவல்..!!!

‘சூது கவ்வும் 2’ படத்தில் நடிகர் சத்யராஜ் உடன் இணைந்து பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூதுகவ்வும்’ . இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . இந்த படம் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டு சூப்பர் ஹிட் அடித்தது . சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது குறித்த தகவல்கள் வெளியானது . இதில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சத்யராஜ் நடிக்கிறார்.

Vijay Sethupathi: 'Soodhu Kavvum' censored U/A without cuts | Tamil Movie  News - Times of India

முதல் பாகத்தை தயாரித்த சி வி குமார் தற்போது இரண்டாவது பாகத்தையும் தயாரிக்கிறார் . மேலும் இந்த படத்தை இயக்குனர் அர்ஜுன் இயக்குகிறார் . தற்போது இந்த படம் குறித்த சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது . இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . நிச்சயம் நடிகர் விஜய் சேதுபதி நடித்தால் படம் வேற லெவல் ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமில்லை .

Categories

Tech |