Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக களமிறங்கும் சதீஷ்…. பிரபல கிரிக்கெட் வீரர் வாழ்த்து…. வைரலாகும் ட்விட்டர் பதிவு…!!!

ஹீரோவாக களமிறங்கும் காமெடி நடிகர் சதிஷுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் சதீஷ் தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

இந்த பூஜையில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனும் பங்கேற்று படக்குழுவினரை வாழ்த்தினார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் சிங் நடராஜனும் சமூகவலைத்தள பக்கத்தில் மூலம் சதீஷ்க்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில், “சதீஷ் அண்ணா உங்களுடைய புதிய படத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என பதிவு செய்துள்ளார்.

Categories

Tech |