ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக இயற்றப்பட்ட சட்ட மசோதா இத்தாலியின் செனட் சபையில் நிறைவேற்றப்பட வேண்டிய சூழலில், இதற்கு வாட்டிகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக எவராவது வன்முறையில் ஈடுபட்டாலோ, பாகுபாட்டை காட்டினாலோ அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக இத்தாலியிலிருக்கும் செனட் சபையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சட்ட மசோதா ஏற்கனவே அரசியல் தலைவரான அலெக்சாண்ட்ரோ ஜான் என்பவரின் பரிந்துரையின்படி இத்தாலியிலிருக்கும் கீழ் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து இத்தாலியில் இருக்கும் செனட் சபையில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக இயற்றப்பட்ட இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் அந்நாடு மிகவும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்த சட்ட மசோதாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இத்தாலியின் தூதருக்கு வாட்டிகன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.