Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் நீட் தேர்வு பற்றி மு. க. ஸ்டாலின் பேச்சு

தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், அரியலூர் அனிதா முதல் திருச்செங்கோடு மோதிலால் வரை பல மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துக்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கக்கோரி இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் அனுமதிக்கு அனுப்பி வைத்தும் இதுவரை எவ்வித பதிலும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் விவகாரத்தில் அவையின் உணர்வுகளை மத்திய அரசு கொஞ்சமும் மதிக்கவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் எண்ணிப்பார்க்க முடியாத அடக்குமுறைகள், கெடுபிடிகள் நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதுமணத் தம்பதியின் தாலியை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதுங்கள் என்ற கொடுமை நெல்லையில் நடைபெற்றதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் மற்றும் மாணவர்களின் உணர்வுகளையும் மதிக்காத நீட் தேர்வை இதுவரை ரத்துச்செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு கேட்கவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் பியூஷ் கோகிலை கண்டித்தும் கண்டன தீர்மானம் பேரவையில் கொண்டு வரவேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |