Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 27 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 27 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக தூத்துக்குடி ஊரக மற்றும் நகர உட்கோட்டத்தில் தலா 5 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி உட்கோட்டத்தில் தலா ஒரு வழக்கும், மணியாட்சி, சாத்தான்குளம் உட்கோட்டத்தில் தலா 3 வழக்குகளும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 5 வழக்குகளும் என மொத்தம் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 27 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்த 125 புகையிலை பாக்கெட்டுகள், 142 மதுபாட்டில்கள் மற்றும் 150 கிராம் கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

Categories

Tech |