Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய 31 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 31 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மது, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 16 பேர், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் உள்பட 31 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 210 புகையிலை பாக்கெட்டுகள், 84 மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை, மது பாட்டில்கள் விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாதட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மொத்தம் 29 வழக்குகள் பதிவு செய்து 31 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |