சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இளையான்குடி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் தனியார் சேம்பர் அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் சிறுபாலை காலனியில் வசிக்கும் நாகராசு என்பதும் சட்ட விரோதமாக மது விற்றதும் தெரியவந்துள்ளது. மேலும் இளையான்குடி காவல்துறையினர் நாகராஜை கைது செய்தது மட்டுமல்லாமல் அவர் பதுக்கி வைத்திருந்த 16 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.