சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது வெட்டுப்பட்டான் குட்டை, அறிவொளி நகர், மேற்கு பல்லடம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த சுந்தரம், கனகராஜ், முருகன், பிரகாஷ், கருணைமலை உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.