Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. முதியவர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக முதியவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வடக்கு பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக 20 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் அவரிடம் இருந்த 20 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |