Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. காவல்துறை சூப்பிரண்டு பரிந்துரை…. ஆட்சியரின் உத்தரவு….!!

சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்ட 4 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி மற்றும் ஆற்காடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அப்பகுதிகளில் வசிக்கும் சரண்குமார், பார்த்திபன் மற்றும் ராஜேஷ் ஆகியோரையும், அதன்பின் சட்ட விரோதமாக வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கடலூர் பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதனை அடுத்து இவர்கள் 4 பேரையும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்ததற்கு உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |