சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாற்றம்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கள்ளியூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக அப்பகுதியில் வசிக்கும் முனிசாமி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.