Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்…. அப்பாவு திடீர் முடிவு…. நோ சொன்ன EPS…. செம குஷியில் OPS….!!!!

எதிர்க்கட்சி துணை தலைவர்கள் இருக்க யாருக்கு என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்ட தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் எதிர் கட்சி துணை தலைவர் இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் மாற்றம் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. சபாநாயகர் அப்பாவு அவர்களின் முடிவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதனை முன்னிட்டு ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். எனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில் முடிவை என்னவென்று கேள்வி எழுந்தது.

இந்நிலையில் சபாநாயகர் அப்பாவும் முடிவால் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினை தெரிவித்துள்ளனர். அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தின் பட்டியலில் தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் மாற்றம் இல்லை. எனவே நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை யாருக்கும் ஒதுக்கப்படுகிறது என்பது தொடர்பாக சபாநாயகர் அப்பாவும் இறுதியான ஒரு முடிவு எடுக்கட்டும். அதை பொறுத்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று எடப்பாடி தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் மறைந்த தலைவர்களுக்கு சபாநாயகர் குறிப்பு வாசித்தார். இதனையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சமநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் கூட்டம் நடத்தி சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்தலாம் என முடிவு செய்யப்படும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி மட்டும் பங்கேற்பார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |