மகாராஷ்டிரா அமைச்சர் மீது மை தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களுக்கு பின், மாநில சட்டப்பேரவை கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைபடுத்தி இருக்கிறது. அதாவது இனி மாநில சட்டசபை வளாகத்துக்குள் மை பேனா கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் மகாராஷ்டிர மாநில குளிர்கால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளான நேற்று (டிச..19) சட்டசபைக்குள் நுழையும் அனைத்து நபர்களின் பேனாக்களும் சோதனை செய்யப்பட்டது. ஆகவே சட்டமன்றத்திற்குள் போகும் அனைவரிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டு, மை பேனாக்களை வளாகத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.