Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” பெறப்பட்ட புகார்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாளப்பள்ளத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கியதாக புகார்கள் பெறப்பட்டது. அந்தப் புகாரின்படி மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், பறக்கும் படையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கொட்டகையில் பதுங்கியிருந்த 1 டன் அரிசியை  பறக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதேபோன்று பாகலஅள்ளி பகுதியில் நடைபெற்ற சோதனையில் ஒரு குடிசையில் பதுங்கியிருந்த 1 டன் அரிசியை பறக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து பறக்கும் படை குழுவினர் 2 டன் ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைத்தனர். இதில் ஈடுபட்டவர்கள் குறித்து வழங்கல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |