Categories
மாநில செய்திகள்

வேலூர் மக்களவையில் “ரூ 2 , 38,00,000 பறிமுதல் ” சத்யபிரத சாகு தகவல் …!!

வேலூரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ 2 , 38,00,000பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்

கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த தேர்தலை அரசியல் கட்சிகள் சந்திக்கின்றன.

Image result for தேர்தல் ஆணையம்

இந்நிலையில்தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றோம்.  அங்குள்ள 1,553 வாக்குப்பதிவு மையங்களில் 179 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.  850 வாக்குப்பதிவு மையங்களில் முழுவதும் வெப்கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும்.

Image result for சத்யபிரத சாகு பேட்டி

வேலூர் மக்களவை தொகுதியில் 75 பறக்கும் படை, 39 கண்காணிப்பு குழு, 12 வீடியோ கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.  இதன்மூலமாக இதுவரை முறையான ஆவணம் இல்லாமல்  வாகனங்களில் சுமார் ரூ.50 ,000_க்கும்  அதிகமாக ரொக்கம் கொண்டு சென்றால் பணம்  பறிமுதல் செய்யப்பட்டுகின்றது. இதே போல முறையான  ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசென்றதாக ரூ 2 , 38,00,000 பணமும், ரூ.89.41 லட்சம் மதிப்பிலான 2.980 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது என்று சத்யபிரத சாகு தெரிவித்தார்.

Categories

Tech |