Categories
மாநில செய்திகள்

”உரிய ஆவணமின்றி ரூ.3.57 கோடி பறிமுதல்” சத்யபிரத சாகு தகவல் …!!

வேலூர் மக்களவை தொகுதியில் உரிய ஆவணமின்றி ரூபாய் 3.57 கோடி கைப்பற்றப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு  தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என மும்முனைப் போட்டியாக அரசியல் கட்சிகள் வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தை தொடங்கினர். திமுக சார்பில் கதிர் ஆனந்த்_தும் , அதிமுக சார்பில் AC சண்முகமும் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

வேலூர் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட்து முதல் அங்கே தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்தது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை கண்காணித்து கைப்பற்றும் பணியில் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.3.57 கோடி பணமாகவும் , ரூ.89 லட்சம் மதிபிலான 2.89 கிலோ தங்கமும் , ரூ.5.7 லட்சம் மதிப்பிலான 13.8 கிலோ வெள்ளியும்  கைப்பற்றப்பட்ட்தாக இதன் மொத்த மதிப்பு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். வேலூர் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம்  இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |