Categories
உலக செய்திகள்

பயங்கரவாத அமைப்புக்கு முற்றுப்புள்ளி…. சவுதி அரசின் அதிரடி அறிவிப்பு…. வெளியான மாஸ் தகவல்….!!

சவூதி அரேபிய அரசு தீவிரவாதத்தின் வாசல்களில் ஒன்றாக திகழும் தப்லீக் ஜமாத் அமைப்பிற்கு அதிரடியாக தடை விதித்துள்ளது.

சவூதி அரேபிய அரசு அதிரடி நடவடிக்கையாக தப்லீக் ஜமாத் அமைப்பை தடை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இஸ்லாமிய விவகாரங்களுக்கான சவூதி அரேபிய அமைச்சகம் தீவிரவாத வாசல்களில் ஒன்றாக தப்லீக் ஜமாத் அமைப்பு இருப்பதால் அதனை முற்றிலுமாக தடை செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இருப்பினும் சவுதி அரேபியாவிலிருந்து அதிக அளவிலான நிதியுதவி தப்லீக் ஜமாத்திற்கு கிடைத்து வந்தது. இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் இனி தப்லீக் ஜமாத்தின் செயல்பாடுகள் உலகின் பல நாடுகளிலும் மெல்ல மெல்லமாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் தப்லீக் ஜமாத்திற்கு சவுதி அரேபிய அரசை தொடர்ந்து பல நாடுகளிலும் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் மலேசியா, வங்கதேசம், இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தப்லீக் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளதால் அங்கு அந்த அமைப்பிற்கு தடை விதிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றே சொல்லப்படுகிறது.

Categories

Tech |