Categories
உலக செய்திகள்

குறைந்தது கொரோனா… அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்…. சவுதி அரேபியா அறிவிப்பு…!!!

சவுதி அரேபியாவில் கொரோனாவிற்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சவுதி அரேபியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவியது. எனவே, கடந்த 2020-ஆம் வருடத்தில் அங்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், அங்கு கொரோனா தொற்று முழுவதுமாக குறைந்திருப்பதால் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருக்கிறது.

மேலும், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவிற்கு வரும் போது கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை என்றும் கட்டாயமாக தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமையிலிருந்து இந்த தளர்வுகள் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

Categories

Tech |