சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர், பைசல் பின் பர்ஹான் அல்சாத் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சரான, பைசல் பின் பர்ஹான் அல்சாத், நேற்று முன்தினம், 3 நாட்கள் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். அவரை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ட்விட்டரில் வரவேற்றுள்ளார். அதன்பின்பு, இருவருக்குமிடையே, பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, இருவரும், இரு தரப்பிற்கும் இடையேயான உறவு மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்து ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் நடந்த பின் அங்குள்ள நிலவரம் தொடர்பிலும் விவாதித்துள்ளனர். ஏற்கனவே, இந்தியா, பிற நாடுகளுடன், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பில் பேசி வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைதி பேச்சுவார்த்தையில், முக்கிய பங்கு வகித்த, சவுதிஅரேபியாவின் பிரதிநிதி, இந்தியாவிற்கு வந்து, இந்த பேச்சுவார்த்தையை நடத்தியிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.