Categories
உலக செய்திகள்

‘சவூதி அரேபியாவின் சிங்கப்பெண்’…. சிறு வயதில் இருந்து ஆர்வம்…. ஐந்து ஆண்டுகள் தீவிர பயிற்சி….!!

சவூதி அரேபியாவில் துப்பாக்கிச்சூடும் பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக மோனா என்பவர் பணியாற்றி வருகிறார்.

சவூதி அரேபியாவில் மோனா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் சிறு வயதிலிருந்தே தனது தந்தையுடன் வேட்டைக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு செல்லும்போது அங்கு நடைபெறும் துப்பாக்கிச்சூடுகளில் அவருக்கு மிகவும் ஆர்வம் எழுந்துள்ளது. இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

ميدان الرماية Top-Gun في الرياض والإقبال عليه وتعليمات من مدربة الأسلحة  السعودية منى الخريص - أخبار صحيفة الرؤية

இந்த நிலையில் சவூதியில் உள்ள துப்பாக்கிச்சூடும் பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக தற்போது பணியாற்றி வருகிறார். இவரிடம் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் வந்து கற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய இப்பணியில் தற்போது பெண்களும் பயிற்சி பெற்று வருவதால் எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பழமைவாதம் எண்ணம் கொண்ட பெண்களிடம் இருந்து தான் அதிக எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்று மோனா கூறியுள்ளார்.

Categories

Tech |