ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி கூட்டுப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டில் 20 வருடங்களையும் தாண்டி ஆட்சி செய்து வந்த அலி அப்துல்லா சலே என்ற அதிபர் மக்கள் ஆர்ப்பாட்டத்தால், கடந்த 2011 ஆம் வருடத்தில் ராஜினாமா செய்தார். அதன்பின்பு அதிபராக பொறுப்பேற்ற மன்சூர் ஹாதி சரியான ஆட்சியை நடத்தவில்லை. எனவே ஹவுதி பழங்குடியின கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014 ஆம் வருடத்தில் தலைநகர் சனாவை கைப்பற்றினார்கள்.
அதன்பின்பு, அதிபர் மன்சூர் ஹாதி சன்னி பிரிவினர் அதிகமாக இருக்கும் சவுதி அரேபியாவில் தஞ்சம் அடைந்தார். சவுதி அரேபிய கூட்டுப் படை, அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவு தெரிவித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது 2015ஆம் வருடத்திலிருந்து விமான தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று சனாவில் சவூதி கூட்டுப்படை, வான்வெளி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.