கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த மக்கள் சவுதிக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சவுதி அரசாங்கம் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பொதுமக்கள் வருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சவூதி அரசு வெளியிட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, இந்தோனேஷியா, அர்ஜெண்டினா, பாகிஸ்தான், அயர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், எகிப்து, போர்ச்சுக்கல், லெபனான் போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த தடை உத்தரவு குறித்து சவுதி அரசு கூறும் போது, 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த வைரசால் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் காரணத்தினாலேயே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்த முடிவை மேற்கொண்டதாக சவுதி அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இந்தியர்கள் நுழைய தடை விதித்து, இதற்கான ஆணையை சவுதி அரசு அனுப்பிவிட்டது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த பல பேர் சவுதியில் உள்ள பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளதால், அரசின் இந்த உத்தரவானது அங்கு வேலை செய்யும் இந்திய மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.