சவுதி அரேபியாவின் இளவரசரான முகமது பின் சல்மான் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சவுதி அரேபியாவின் மன்னரான முகமது சல்மான் பின் அப்துல் அஜீஸிற்கு இந்த வருடம் இரண்டு முறை உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. எனவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதன் காரணமாக தன் மூத்த மகனான இளவரசர் பின் சல்மானை மன்னராக்குவதற்கு முடிவெடுத்திருக்கிறார்.
இந்நிலையில் மன்னர் அப்துல் அஜீஸ் நாட்டில் அமைச்சரவையை கலைத்துவிட்டு புதிய அமைச்சரவையை நிறுவிவிட்டார். அந்த வகையில், இளவரசரான முகமது பின் சல்மான் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பாதுகாப்பு அமைச்சராக, மன்னர் சல்மானின் இரண்டாவது மகனான இளவரசர் காலித் பின் சல்மானும், வெளியுறவு அமைச்சராக, இளவரசர் பைசல் பின் பர்கான் அல் சவுத்தும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.