பிக்பாஸில் இருந்து வந்த கேபிக்கு அவரது நண்பர்கள் சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்துள்ளனர் .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவுபெற்றது . இதில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் சிறப்பான வரவேற்புகள் கொடுத்து வருகின்றனர் . இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேப்ரியல்லாவுக்கு அவரது நண்பர்கள் சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்துள்ளனர் .
தற்போது நண்பர்களுடன் கேபி உற்சாகமாக ஆடிப்பாடி கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிக்கு தேர்வான கேபி பிக்பாஸ் கொடுத்த பணப்பெட்டி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது .