சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு ஏற்கனவே நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் உடல் நலம் சரியானதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் இவருக்கு மீண்டும் இன்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஒரு முறை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.