அண்ணா திமுக எம்ஜிஆர் உடைய கட்சி, எம்ஜிஆர் உடைய ஆட்சி, அம்மாவுடைய ஆட்சி அதைத்தான் நாம் சொல்லிக் கேட்கிறோம். திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தில் பல மக்களை பாதிக்கின்ற விஷயங்கள் இருக்கிறது. மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது.
ஆனால் அண்ணா திமுகவில் இதைப் பற்றி பேசுவதில்லை. இபிஎஸ்யா ? ஓபிஎஸ்யா சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது . இன்னும் இதையே பேசிக்கொண்டு இருக்கிறோம். அப்போ இவர்களின் நோக்கம் என்னவென்றால், இவர்களுக்கு இருக்கின்ற வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு இதை இன்னொரு மூன்று ஆண்டு காலம் கொண்டு போவார்கள். அதற்குள் நாடாளுமன்ற தேர்தல் அண்ணா திமுக வெற்றி பெற முடியுமா ?
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியுமா ? அதுக்கு அடுத்த சட்டமன்றத் தேர்தலின் போது தடிப்புடிச்சு நடக்குற வயது என்ற நிலைக்கு ஒபிஎஸ், இபிஎஸ்ஸும், சசிகலா எல்லாரும் வந்து விடுவார்கள். அப்போ அண்ணா திமுகவை வலிமையானதாக காப்பாற்றுவது மட்டும்தான் எங்களுடைய நோக்கம் என தெரிவித்தார்.