Categories
பல்சுவை

நிலவிலும் செவ்வாயிலும் இடம் வேண்டாம்….. நம் பூமியின் சுற்று சூழலை இயன்றவரை பாதுகாப்போம்….!!

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த செய்தித் தொகுப்பு

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. கடந்த தலைமுறை நமக்கு கொடுத்த பூமியையும் அடுத்த தலைமுறைக்கு பத்திரமாக கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. ஆனால் நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் எரி தணலாய் மாறிக்கொண்டிருக்கிறது பூமி. பிராணவாயுவை கொடுக்கும் மரங்களை வெட்டியதால் மனித இனம் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும் சுவாசிக்க திணறி வருகின்றன.

மரங்களின் எண்ணிக்கை குறைவதால் நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக உணர்ந்து வருகிறோம். சுவாசிக்கும் சுத்தமான காற்று நுரையீரலின் கரை தொடவேண்டும் என்ற கவிஞரின் கனவு கனவாகவே போய்க்கொண்டிருக்கிறது. மனிதனின் சுயநலத்தால் மரங்கள் வெட்டப்படுவதால் பறவைகளின் கதறலையும், வனங்களை இழந்த விலங்குகளின் கோலத்தையும் கவனிக்க முடியவில்லை.

புவி வெப்பமயமாதலால் பனிப்பிரதேசங்களில் உருகிவிழும் பணியால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மூழ்கும் தீவுகள் ஒருபுறம் என்றால் இயற்கை சீற்றத்தால் பாதிப்புகள் மறுபுறம். நமக்கு கிடைத்த அழகான பூமியை அழித்துவிட்டு நிலவிலும் செவ்வாயிலும் இடம் தேடுவதும் நீர் தேடுவதும் சரியா என்ற கேள்வி எழுகிறது. நாம் வாழும் வரை இந்த பூமியை காக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இயன்றதை செய்வோம். இழந்த சுற்றுச்சூழலை மீட்போம்.

Categories

Tech |